சுங்கச் சாவடியைக் கடக்க அறிமுகமான புதிய செயலி!! அறிமுகமாவதில் சிக்கல்!!

சுங்கச் சாவடியைக் கடக்க அறிமுகமான புதிய செயலி!! அறிமுகமாவதில் சிக்கல்!!

Myrentas செயலி அறிமுகமாவதில் தாமதம்…

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் வழியாக ஜொகூர் பாலத்தை கடக்கும் மலேசிய வாகன ஓட்டிகள் ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து QR குறியீட்டு முறையைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் செயலி பயன்பாட்டிற்கு வர இன்னும் இரண்டு வாரங்களாகும் என்று மலேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த செயல்முறையை முடிப்பதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அதனை ஜொகூர் மாநில அதிகாரி முகமது பஸ்லி கூறினார்.

இந்த செயலியை உருவாக்கி விற்பனை செய்த நிறுவனமான MyRentas அடுத்த இரண்டு வாரங்களில் செயலி தயாராகி விடும் என்று கூறியது.

துவாஸில் இந்த செயலியானது அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே சீராக இயங்குகிறது என்று அவர் கூறினார்.

மலேசிய வாகன ஓட்டிகள் தங்கள் பாஸ்போர்ட்டை காட்டாமல்,QR குறியீட்டைப் பயன்படுத்திச் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் திட்டம் முதலில் 3 மாதங்களுக்கு சோதிக்கப்படும் என்று மலேசிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.