இந்தியா தலைநகர் புதுடெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரப்போவதை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார்.
இந்த முடிவால் குளிர்காலத்தில் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
அதோடு புதுடெல்லியில் காவல்துறை நிலையங்கள் வானவேடிக்கை நடத்துவதற்கான அனுமதி அளிப்பதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
பட்டாசுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது, உற்பத்தி செய்வது, அவைகளை வைத்திருப்பது,அவைகளை வெடிப்பது முதலிய அனைத்தும் புதுடெல்லியில் தடை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
தீபாவளிக்கு முன்னதாக புதுடெல்லியில் பட்டாசுகளை வெடிப்பதற்கும், விநியோகம் செய்வதற்கும் கடந்த ஆண்டுகளில் நகரின் அதிகாரிகள் தடை விதித்தார்கள்.
இந்த தடையை மீறி செயல்பட்டால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.