ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!
மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி சூட்டால் தாக்கப்பட்ட நபர் தரையில் கிடப்பதை பார்த்ததாகவும் அவர் கூறினார் .
Info Berita semasa பேஸ்புக் பக்கத்தில், சடலம் மீது வெள்ளை துணி போர்த்தப்பட்டிருந்ததை காட்டும் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ஜொகூர் பாரு காவல்துறை உறுதி செய்தது.
Follow us on : click here