மார்ச், 24-ஆம் தேதி இரவு8 மணியளவில் லோராங் தோ பாயோவில் இருக்கும் வீட்டிற்கு ஒருவர் தீ வைக்க முயல்கிறார் என காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்விரைந்தனர்.
அப்போது அந்த நபர் அதிகாரிகளைப் பார்த்த உடன் அவரிடம் இருந்த கத்தியைக் காட்டிக்கொண்டே அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார்.
அந்த நபர் காவல்துறை அதிகாரிகளின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை.
இதனால் taser எனப்படும் மின்துப்பாக்கியை அவர்மீது பயன்படுத்தினர்.
அதன்பின்அவரைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர் கட்டளைகளைப் பின்பற்றாததால் மின்துப்பாக்கியைப் பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவரிடம் இருந்து ஒரு சுத்தியல், ஒரு Swiss army கத்தி , ஒரு கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த நபரின் வயது 61 . அவர் மீது பொது இடத்தில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டைக் காவல்துறை சுமத்தி உள்ளது.