சீனப் புத்தாண்டான நேற்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Monterey Park ல் சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.அதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாகவும் காவல்துறைத் தெரிவித்தது.இதில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தை நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் ஹு சான் திரான். இவருடைய வயது 72.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருந்த சிலர், ஹு ஆயுதமேந்தி இருந்ததாகவும், கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறினர். அதன்பின் அவர் தப்பி ஓடி உள்ளார்.அவர் தப்பி ஓடிய வெள்ளை நிற வேனைச் சுற்றி வளைத்துக் காவல்துறை பிடித்தது. அப்போது அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலைச் செய்து கொண்டார். அவர் உயிரிழந்ததைக் காவல்துறை உறுதி செய்தது. இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை இதைத்தொடர்ந்து மேல் விசாரணைத் தொடர்கிறது.