சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான Kawshigan என்ற நபர் ஒருவரிடம் மோசடி செய்துள்ளதாக நவம்பர் 30ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இவர் தனது கூட்டாளியான Cheng Zie Sian என்பவருடன் சேர்ந்து திரு Tan Wei Liang என்பவருக்கு போலியான MacBook Pro லேப்டாப்பை விற்றதாக கூறப்படுகிறது.
அந்தப் போலியான லேப்டாப் முறையான வரிசை எண்ணுடன் சீல் வைக்கப்பட்டு courier மூலம் திரு Tan அவர்களிடம் வழங்கப்பட்டது.
அவர் அந்த போலியான லேப்டாப்பை உண்மையானது என்று நம்பி S$2650 செலுத்தினார்.
இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Kawshigan-ஐ ரிமாண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.