சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி லட்சக் கணக்கில் ஏமாற்றிய நபர் கைது.

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டியைச் சேர்ந்த சரவணன்.அவரது குடும்பத்துடன் விவசாய வேலை செய்து வருகிறார். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பது, வெளிநாட்டிற்கு சென்று நன்கு சம்பாதித்து குடும்பத்தினரை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர். அவர் மட்டுமல்லாமல் அவரது நண்பர்களும் அதே கனவுகளுடன் இருந்தனர்.இதனை அடுத்து எப்படியாவது வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நடுவுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை சரவணன் மற்றும் அவரது 10 நண்பர்கள் வெளிநாடு செல்வதற்காக அணுகினர்.சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை இருக்கிறது.அதுவும் அதிக சம்பளத்துடன் வேலை இருக்கிறது என்று இனிக்க இனிக்க சரவணன் மற்றும் அவரது நண்பர்களிடம் பேசியுள்ளார். நீங்கள் உடனடியாக பணம் கட்டினால் விசா வாங்கி தருவதாக கூறியுள்ளார்.அவர்கள் பிரசாந்த் கூறியதை நம்பி அவரது இரண்டு வங்கி கணக்கில் 2912500 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளனர்.அதோடு மெடிக்கல் டெஸ்ட்டுக்காக கூடுதலாக 1,07,000 ரூபாய் பணத்தை பிரசாந்தை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர்.சரவணன் மற்றும் நண்பர்களுக்கு விசாக்களை பிரசாந்த் வழங்கினார்.

அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை சோதித்து பார்த்த போது அது போலி என்பது தெரிய வந்தது.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த சரவணன் அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சரவணன் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்தார். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான காவல் அதிகாரிகள் பிரசாந்தைப் பிடித்து விசாரணை செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு போலி விசாக்களை வழங்கியது தெரியவந்தது.இதனை அடுத்து காவல்துறை பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறை எச்சரிக்கை :

இச்சம்பவத்தை அடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மற்றும் ஏஜென்ட்கள் வழியாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .மோசடிக்காரர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூரில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 10 பேருக்கு போலி விசாக்களை வழங்கி மோசடி சிகேத வழக்கில் கைதான நபர் மேலும் எத்தனைப் பேருக்கு போலி விசா வழங்கி மோசடி செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan