முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!!

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!!

சிங்கப்பூர் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மணி நேரத்திற்குள் மீண்டும் புறப்பட்ட இடமான சிங்கப்பூருக்கே திரும்பியது.

விமானத்தில் 197 பயணிகள், 14 பணியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஏர்லைன்ஸ் விமானம் UA 28 சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக மே 14-ஆம் தேதி சுமார் 11.04 மணியளவில் தரையிறக்கப்பட்டதாக விமான செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த விமானம் 9 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் விமான நிலையத்திற்கு திரும்புவதற்கு முன் போயிங் 787-9 ட்ரீம்லைனர் 31000 அடி உயரத்தில் சென்றதாக ஏ2இசெட் இணையதளம் கூறியது.

விமானத்தை ஆய்வு செய்யும் போது இடது என்ஜின் கவ்லிங் மற்றும் என்ஜின் கேஸில் ஒரு துளை இருப்பது தெரியவந்தது.

மேலும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக எந்த பிரச்சினையும் இல்லாமல் தரையிறங்கினர்.

அவர்களுக்கு தேவையான ஹோட்டல், தங்குமிடங்கள் மற்றும் உணவுக்கான வவுச்சர்கள் உள்ளிட்டவைகளை நிறுவனமே ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது.

மற்றொரு விமானத்தில் முன்பதிவு செய்து மே 15-ஆம் தேதி அவர்களின் பயணத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.