நீண்ட நாள் போராட்டம்!! $4.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு!!
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட பயங்கர விபத்து நடந்தது.
இச்சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்த கோர விபத்தில் டொயோட்ட காரில் முன் இருக்கையில் இருந்த 44 வயதுடைய லிம் சுன் யோங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மூளையில் நிரந்தர காயம் ஏற்பட்டது.
தனது சொந்த ஊருக்கு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன்செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்திற்கு பிறகு அவரால் வேலை செய்ய இயலவில்லை.நர்சிங் கேரில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
மூளையில் ஏற்பட்ட காயத்தால் அவரின் செயல், பேச்சு மற்றும் அறிவாற்றல் என அனைத்தும் பாதிக்கப்பட்டது
இதனை அடுத்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
நீண்ட ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது.
அவர் ஆறு பேர் மீது வழக்கு தொடுத்தார்.
டொயோட்டா மற்றும் அரை டிரைலருக்கு இடையேயான முதல் மோதலில் லிம்மிற்கு ஏற்பட்ட காயங்களுக்கு 66.6 முதல் 96 சதவீதம் வரை பங்களிப்பு உள்ளது.
மேலும் டொயோட்டா மற்றும் BMW கார் மோதலில் 10 முதல் 33.3 சதவீதம் பங்களிப்பு உள்ளது.
லிம்மின் காயங்களுக்கு அரை டிரெய்லர் டிரைவர் மற்றும் அவரது முதலாளி ஆகியோர் 50 சதவீதமும்,டொயோட்டா டிரைவர் மற்றும் அவரது முதலாளி ஆகியோர் 30 சதவீதம் பொறுப்பு என்று நீதிபதி கூறினார்.
இதனை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ளேயே தங்கள் பொறுப்பு சதவீதத்தின் படி $4.7 மில்லியன் சிங்கப்பூர் டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Follow us on : click here