சிங்கப்பூரில் ஜூலை 12-ஆம் தேதி யிஷீன் அவென்யூ ரோடுக்கு இடையிலான சந்திப்பில் விபத்து ஏற்பட்டது.
சைக்கிள் ஓட்டி வந்த 18 வயதுடைய நபரை தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சைக்கிள் ஓட்டி வந்தவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் காவல்துறைக்கு இந்த விபத்து குறித்து மாலை 5.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவ உதவியாளர் உறுதி படுத்தினார்.
இந்த விபத்து காரணமான 37 வயது பேருந்து ஓட்டுநரைக் கைது செய்துள்ளது. அவர் கவன குறைவாக பேருந்தை இயக்கியதாக கூறப்படும் காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக கூறினர்.