சிங்கப்பூரில் புதுப்பொலிவுடன் ஜப்பானிய பூங்கா!!
சிங்கப்பூர்: பூங்கா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது வண்ணமயமான பூக்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் ஜூரோங் லேக் கார்டனில் உள்ள ஜப்பானிய பூங்காவில் கூடுதல் அழகு சேர்ப்பதற்காக பலவகையான ரகங்களில் அல்லி பூக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜூரோங் லேக் கார்டனில் அமைந்துள்ள பூங்காக்களில் ஜப்பானியப் பூங்காவும் ஒன்று. இங்கு 2019 இல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது.
அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் பூங்காவனது பொதுமக்கள் பயன்படும் வகையில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பூங்காவில் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. பூங்காவில் கண்களை கவரும் 150க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான அல்லிகள் காணப்படுகின்றன.அவற்றில் 100 பூக்கள் சிங்கப்பூருக்கு முதன் முறையாக வழங்கப்படுகின்றன.
அந்தப் பூக்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
சில வகையான அல்லிகள் இரவும் பகலும் பூக்கும் திறன் கொண்டது.அவற்றில் ராட்சத அல்லிகள் உள்ளன. அதன் இலைகள் சுமார் 3 மீட்டர் அகலம் வரை வளரும். முழுமையாக வளர்ந்த அந்த அல்லியின் இலையானது ஒரு குழந்தையின் எடையை தாங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஜப்பானிய பூங்கா தோட்டமானது சுமார் 13 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இது கிட்டத்தட்ட 18 கால்பந்து மைதானங்களின் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது.
பூங்காவில் இருக்கும் மற்றொரு சிறப்பு சன்கன் தோட்டம். மழை நீரை மறுசுழற்சி செய்யும் வசதியும் இதில் அடங்கும்.அதன் அருகில் ஒரு மலர் தோட்டம் உள்ளது. அதில் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் களப்பணியாற்றுவதற்கு ஏற்ற வசதிகள் உள்ளன.
Follow us on : click here