இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை….

கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப் பெருக்கத்தால் 18 பேர் உயிரிழந்ததாகவும், கிட்டத்தட்ட 100 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மோசமான பேரழிவு இதுவே ஆகும்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரி உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

இதனால் கிட்டத்தட்ட 22,000 பேரின் வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் 14 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்றும், பல வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், ராணுவ தளங்கள் சேதமடைந்தன என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஏற்கனவே பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேற்றில் மூழ்கிய வாகனங்களை தோண்டி எடுப்பதற்கான தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.