அடுத்த வாரம் முதல் Air India Express சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு தினசரி விமான சேவையைத் தொடங்க உள்ளது.
தற்போது விமான நிறுவனம் அது வாரத்துக்கு 3 விமான சேவையை வழங்கி வருகிறது.
தினசரி சேவையை அடுத்த வாரத்திலிருந்து தொடங்குவதற்கு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதை தெரிவித்தது.அக்டோபர் 21-ஆம் தேதி தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அக்டோபர் 21 முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை இருவழி விமானங்கள் இருப்பதாக அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள காலாண்டரில் காட்டுகிறது.
இருப்பினும் எவ்வளவு நாட்களுக்கு இந்த சேவை தொடரும் என்பது குறித்த தகவலை விரைவில் நிறுவனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்கள் விரைவில் பகிரப்படும் என்று அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.