சிங்கப்பூரில் மாதம் 100 முதல் 150 டாலர் வரை உங்கள் பணத்தை சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழி!

சிங்கப்பூரில் மாதம் 100 முதல் 150 டாலர் வரை உங்கள் பணத்தை சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழி!

சிங்கப்பூரில் நாம் எவ்வளவுதான் அதிகமாக சம்பாதித்தாலும் வீட்டிற்கு அனுப்பும் தொகை மிக குறைவுதான். அதற்கு மிகவும் முக்கியமான காரணம் நமக்கு ஆகும் செலவுகள்.

சிங்கப்பூரில் அனைத்து விதமான பொருட்களின் விலையும் சற்று அதிகம் தான்.
இதில் தவிர்க்க முடியாத செலவு என்றால் நாம் சாப்பாட்டிற்காக செலவு செய்வதுதான்.
இப்போது சாப்பாட்டு செலவை எப்படி குறைக்கலாம் என்று பார்ப்போம்.

சிங்கப்பூரில் உணவுகளைப் பொறுத்தவரை கடைகளை பொறுத்து அதன் விலை மாறுபடும்.
அதேபோல உணவுகளை பொறுத்தும் விலை மாறுபடும்.
உதாரணத்திற்கு நீங்கள் பிரியாணி வாங்குகிறீர்கள் என்றால் 7 டாலர் முதல் 12 டாலர் வரை இருக்கும். அதே சமயத்தில் சைவ உணவு வாங்குகிறீர்கள் என்றால் 5 டாலருக்குள் முடிந்து விடும்.

உங்களுக்கான சாப்பாடு செலவை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால், இந்த உத்தியைப் பயன்படுத்தி பாருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்களின் உணவு முறையை இந்திய உணவிலிருந்து சீன உணவிற்கு மாறினால் உங்களுக்கான செலவை குறைக்க அதிக வாய்ப்புள்ளது.

சீன உணவைப் பொறுத்தவரை இந்திய உணவை விட அதன் விலை குறைவு.
சீன உணவை பொறுத்தவரை உங்களின் ஒரு நாள் சாப்பிடுவதற்கான செலவிற்கு 10 டாலர் போதுமானது.

இதே இந்திய உணவாக இருந்தால் குறைந்தது 15 டாலரில் இருந்து 20 டாலர் வரை செலவாகும்.

உங்களுக்கு சீன உணவு பிடிக்கவில்லை என்றால், சீனக் கடைகளில் கிடைக்கும் பிரைட் ரைஸ் கிட்டத்தட்ட நமது உணவு போல தான் இருக்கும். அதே போல் சீனக் கடைகளில் கிடைக்கும் வெள்ளை சாதம் மற்றும் குழம்பு நமது உணவை ஏற்றதாக இருக்கும்.

நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அப்படியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களிடம் பணம் குறைவாக இருக்கும் சமயத்தில் சீனக் கடைகளில் சாப்பிடுவது உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு ஆகும் செலவுகளில் குறைந்தது மாதம் $100 டாலர் முதல் $150 டாலர் வரை குறைய அதிக வாய்ப்புள்ளது.

சிங்கப்பூரில் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொண்டு உங்களின் வாழ்வை செல்வ செழிப்பாக மாற்றுங்கள்.

இப்பதிவு உங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தால், இப்பதிவு உங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததுபோல் உங்களுடைய நண்பர்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நினைத்து அவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.