Latest Sports News Online

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி!

பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தியா – சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரி வர்த்தனை முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துக் கொண்டார்.

இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்றார்.

இந்தியாவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை இருப்பது போல், சிங்கப்பூரில் Paynow பண பரிவர்த்தனைச் செயலி இருக்கிறது.

தற்போது இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கு யு.பி.ஐ- Paynow இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் – இந்தியா பிரதமர்கள் இருவரும் Paynow – UPI இணைப்பு வசதியின் திட்டத்தை அறிமுகத்துவது பற்றி தொலைப்பேசியில் உரையாடியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த புதிய திட்டதால் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் ஆகியோர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் மூலம் குறைந்த செலவில் பண பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.

இந்த புதிய திட்டதால் இருநாட்டு மக்களுக்கும் கிடைத்த பரிசு என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் DBS bank,Liquid Group தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தை படிப்படியாக பயன்படுத்தலாம்.

இந்தியாவில் இருக்கும் DBS India, ICICI, Axis, SBI, Indian Bank போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் தற்போது Paynow-UPI மூலம் பணப்பரிவர்த்தனைச் செய்துக் கொள்ளலாம்.

தற்போது Paynow – UPI இணைந்து இருப்பதால் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இதற்கு எண் இருந்தால் போதும். இதன் மூலமாக மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.