உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… விரைவில் இவையெல்லாம் விற்பனைக்கு வரும்!!

உணவு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்... விரைவில் இவையெல்லாம் விற்பனைக்கு வரும்!!

சிங்கப்பூர்: உணவு பிரியர்கள் எப்பொழுதும் வித்தியாசமான உணவை தேர்ந்தெடுத்து உண்ண ஆசைப்படுவார்கள். எல்லா இடங்களிலும் எந்த உணவு ஸ்பெஷல் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். சிலர் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் வெளிநாடுகளில் உள்ள உணவுகளை ருசித்து சாப்பிட ஆசைப்பட்டு கடல் கடந்து செல்வதும் உண்டு. அந்த வகையில் சில நாடுகளில் உள்ள மக்கள் பாம்பு,தவளை உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுவது உண்டு.

அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள உணவகங்களில் பூச்சிகளை விற்பனை செய்வதற்கான உரிமம் விரைவில் ஒப்புதல் ஆக உள்ளது. அதற்கான உரிமம் கிடைக்கப்படும் பட்சத்தில் அடுத்த மாதமே அவை விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி உருண்டைகளில் புழுக்கள்… சுஷியுடன் வறுத்த வெட்டுக்கிளிகள்… என்ன பல வித்தியாசமான உணவுகள் சிங்கப்பூர் உணவகங்களில் அடுத்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்… எனவே வித்தியாசமான உணவை தேடும் உணவு பிரியர்களுக்கு ருசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக பூச்சிகளை உணவாக விற்க அனுமதி வழங்குவது தாமதமானது. 2022 ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், எந்த பூச்சிகள் மற்றும் பூச்சி தயாரிப்புகளை விற்கலாம் மற்றும் விற்பனையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனையை பொதுமக்களிடம் கேட்டது.

கடந்த ஆண்டு புழு, வெட்டுக்கிளி போன்ற 16 வகையான பூச்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு முதல் பாதியில் திட்டத்தின் நடைமுறைகளை அறிவிக்க உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதச்சத்து பூச்சிகளிடமிருந்தும் கிடைக்கும்.

பூச்சிகளை மாற்று உணவாகக் கருதுமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டது.