தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடத்தி வரப்பட்ட 7.5 டன் எடை கொண்ட போதைப்பொருளை ஸ்பெயின் துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.டன் கணக்கில் போதைப் பொருட்கள் சிக்கி உள்ளது.
இந்த போதைப் பொருட்கள் உறைந்த டியூனா மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்பெயின் நாட்டின் மற்றுமொரு துறைமுகத்தில் கப்பல் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் அவர்கள் உருவாக்கிய இறக்குமதி நிறுவனம் மூலம் சர்வதேச அளவில் உறைந்த மீன்கள் மற்றும் கடல் உணவுகளை வர்த்தகம் செய்து வந்துள்ளனர்.
மேலும் இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கும் அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் கடத்தல் நடவடிக்கைகளை அவர்கள் மறைத்து வந்துள்ளதாக அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.