
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வேலை பார்க்கும் இடத்தில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் புளோக் 371B செம்பவாங் அவென்யூவில் பிற்பகல் 3 மணியளவில் நேர்ந்தது.
வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) கட்டுமான தளத்தில் இச்சம்பவம் நடந்தது.
உயிரிழந்த கட்டுமான ஊழியர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 29.
அவர் கட்டுமான தளத்தில் 10-வது தளத்தில் கிரேன் ஓட்டுநருக்கு பொருள் கழிவு தொட்டியை தூக்குவதற்கு வழிகாட்டி கொண்டிருந்தார்.
அப்போது அது வேகமாக அசைந்தது. அவர்மீது பலமாக மோதியது.
அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளுடன் கீழே விழுந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் சுயநினைவின்றி இருந்தார்.
கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுவரை மொத்தம் 14 வேலையிட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஏற்பட்ட மரணங்களாகும்.