படுக்கையறையில் ஏற்பட்ட தீ!! முதியவர் மருத்துவமனையில் அனுமதி!!

படுக்கையறையில் ஏற்பட்ட தீ!! முதியவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூரில் சீனாடவுனில் உள்ள Banda தெருவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் மே 11-ஆம் தேதி நடந்தது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு,காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மதியம் 2.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை மற்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

11-ஆவது தளத்தில் உள்ள ஓர் வீட்டின் படுக்கறையில் தீ மூண்டது. மெத்தையில் ஏற்பட்டிருந்த தீயை தீயணைப்பாளர்கள் வாட்டர் ஜெட் கொண்டு அணைத்தனர்.

தீ விபத்தில் 68 வயது முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது சுயநினைவு இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தது.

மேலும் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.