ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!!
மலேசியா : ஜூன் 14-ஆம் தேதி(நேற்று) ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஜென்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பாங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் அப்துல் காணி கூறினார்.
ஜென்டிங் மலேசியாவின் செய்தி தொடர்பாளர், இந்த தீ விபத்து 4 மாடிகளைக் கொண்ட ஸ்கை அவென்யூ ஷாப்பிங் மாலில் மாலை 4.30 மணி அளவில் ஏற்பட்டதாக கூறினார். தீயணைப்பு வீரர்கள் மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 6.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டிடம் முழுவதும் தீ மற்றும் அடர்த்தியான கரும்புகை பரவி இருந்தது என்று அதனை நேரில் பார்த்தவர்கள் செய்தி நிறுவனமான பெர்னாவிடம் தெரிவித்தனர்.
ஷாப்பிங் மாலில் இருந்தவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தினர்.
சுமார் 5000 பேரை ஷாப்பிங் மாலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தது. மேலும் தீயானது இரண்டாவது மாடியில் இருந்து நான்காவது மாடிக்கு பரவுவதற்கு முன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என்ற தகவலை மலாய்மெயில் செய்தி தெரிவித்துள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பதற்காக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Follow us on : click here