சிங்கப்பூரில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ…… உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஆபத்தான நிலையில் சன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பரிதாபம்…..

அக்டோபர் 15-ஆம் தேதியில் நடந்த ஓர் தீ விபத்து சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது.

Tampines இல் உள்ள HDB யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது கட்டிடத்தில் சிக்கி கொண்ட மூன்று பேர் தீயிலிருந்து தப்பிப்பதற்காக சன்னல் ஓரத்தில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை வான்வழி மீட்பு தளத்தைக் கொண்டு தீயணைப்பாளர்கள் காப்பாற்றினர்.

தீயணைப்பாளர்கள் ஒரு மீட்பு தளத்தைப் பயன்படுத்தி சன்னலில் வெளியில் இருந்த இருவரை காப்பாற்றினர்.

மற்றொருவரை காப்பாற்ற வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து காப்பாற்றியது.

ரூமில் சார்ஜ் செய்யப்பட்ட இரண்டு Personal Mobility Devices களின் பேட்டரிகளில் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அன்றிரவு 9.10 மணியளவில் புளாக் 872A Tampines Street 86 இல் தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும்,தீயை தண்ணீர் ஜெட் கொண்டு அணைத்ததாகவும் கூறியது.

இந்த சம்பவத்தால் அருகில் இருந்த சுமார் 15 பேர் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மீட்கப்பட்ட மூவரையும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Personal Mobility Devices களின் பேட்டரிகளை நீண்ட நேரம் அல்லது ஒரே இரவில் சார்ஜ் செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு SCDF அறிவுறுத்தியது.போலியான பேட்டரிகளை வாங்க அல்லது பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறியது.