தெற்குத் தைவானில் உள்ள golf பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவரை காணவில்லை என்றும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதறிய உடல் துண்டுகளை அடையாளம் காண கூடுதல் சோதனை தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகளால் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிப்புக்கு காரணம் தொழிற்சாலையில் சேகரித்து வைக்கப்பட்ட Peroxide-ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.