வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய MOM ஒரு சில விதிமுறைகள்!!

வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய MOM ஒரு சில விதிமுறைகள்!!

MOM (மனிதவள அமைச்சகம்) அறிவித்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகள்!!

சிங்கப்பூரில் நீங்கள் வாங்குகிற சம்பளம் உங்களின் செலவினத்தையும்,வாழ்வாதாரத்தையும் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள கம்பெனிகள் அவர்களிடம் பணி புரியும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 7 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். உங்களுக்கான சம்பளத்தை சம்பளத்தேதிக்குள் கொடுக்க தவறினால் நீங்கள் MOM இல் சென்று புகார் அளிக்கலாம். சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி செல்கின்றனர்.ஆனால்,அந்தப் பணத்தை கம்பெனிகள் வாங்குவது கிடையாது. அந்த பணம் ஏஜென்ட்களுக்கு செல்கிறது.மேலும் IP விண்ணப்பிப்பதற்கு, SOC போன்றவற்றிற்கு கம்பெனிகள் பணம் வாங்க கூடாது. அதோடு பர்மிட் முடியும் ஊழியர்களுக்கு அதை புதுப்பிப்பதற்கு ஒரு சில கம்பெனிகள் பணம் கேட்கிறார்கள். ஆனால் சிங்கப்பூர் விதிமுறைப்படி அதற்கென கட்டணம் வாங்க கூடாது.உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் கம்பெனியில் இருந்து மெடிக்கல் சான்றிதழ் கொடுப்பார்கள்.அதனைப் பயன்படுத்தி நீங்கள் டாக்டரை அணுகலாம்.அதற்கென தனியாக எந்த பணமும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. உங்களை பரிசோதித்த டாக்டர் நீங்கள் எத்தனை நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை கூறுவார்கள்.டாக்டரின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.அதற்கு எந்த பணமும் கட்ட தேவையில்லை.நீங்கள் ஓய்வு எடுக்கும் நாட்களில் கண்டிப்பாக உங்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை கம்பெனிகள் வழங்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கியமான விதிமுறைகள் :

உங்களுக்கான வேலை நேரத்திற்கு பின் நீங்கள் வேலை செய்வதை ஓவர் டைமாக கணக்கெடுத்துக்கொள்ளப்படும் .ஒரு சில கம்பெனிகள் அதிகமான ஓவர் டைம் அளிக்கிறார்கள். அதனால் ஒரு சிலர் அன்று செய்ய வேண்டிய ஓவர் டைம்மை செய்ய தவறுவதால் அடுத்த நாள் அதை சேர்த்து வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். அல்லது ஒரே நாளில் அதிக மணி நேரம் வேலைப்பார்ப்பதால் வேலையிடத்தில் விபத்து ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மொத்தம் 72 hr மட்டுமே ஓவர் டைம் பார்க்க வேண்டும். அதற்குமேல் அதிகமாக ஓவர் டைம் பார்க்க கூடாது என்று MOM தெரிவித்துள்ளது.

அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டும்.மேலும் இந்த நாட்களில் வேலைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. உங்களுடைய பர்மிட் முடிந்து விட்டால் நீங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல கம்பெனிகளே உங்களுக்கான விமான டிக்கெட்டை புக் செய்து கொடுக்க வேண்டும்.

நீங்கள் பணி புரியும் கம்பெனிகள் உங்களுடைய பாஸ்போர்ட்டை வாங்கி வைக்க கூடாது. அது ஊழியர்களிடமே இருக்க வேண்டும். ஆனால் இதை பெரும்பாலான கம்பெனிகள் பின்பற்ற மாட்டார்கள்.ஏனெனில்,நீங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விடுவீர்கள் என்ற நல்ல நோக்கத்துடன் வாங்கி வைத்து கொள்கிறார்கள். ஆனால் இது கட்டாயம் இல்லை.

அடுத்ததாக நீங்கள் எந்த வேலைக்காக சென்று உள்ளீர்களோ அந்த வேலை மற்றும் அந்த கம்பெனியில் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எங்கும் வேலை செய்யக்கூடாது. அது சட்டவிரோதமான செயல். உங்களுடைய பெர்மிட்டில் குறிப்பிட்டுள்ள கம்பெனி பெயர்,முகவரியில் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.


நீங்கள் சிங்கப்பூர் செல்பவராக இருந்தால் அனைத்தையும் தெரிந்துகொண்டபின் செல்வது மிகவும் நல்லது.