தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!!

இந்தியாவில் தக்காளி என்ற பெயரை கேட்டாலே, இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு தக்காளியின் விலை ஆனது வரலாறு காணாத உயர்வினை கண்டுள்ளது. நான் அன்றாடம் வீட்டில் அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள் தக்காளி என்பதால், தக்காளியின் விலை உயர்வு சற்று அதிகமாகவே வாட்டி வதைக்கின்றது.

எனவே இன்றைய இளம் தலைமுறைஇனர் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப் சேனலில் வீடியோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் தக்காளியின் விலை உயர்வானது, பொது மக்களுக்கு பாதிப்பாக இருந்தாலும், விவசாயிகளுக்கு ஏற்றத்தினை கொடுத்துள்ளது.

தக்காளியின் விலை கிலோ இரண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் விற்ற பொழுது தக்காளியை குப்பையில் போட்டு கண்ணீர் விட்ட விவசாயிகள் இந்த காலகட்டத்தில் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர் என்றே கூறலாம். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம்.

இந்தியாவின் தக்காளி இறக்குமதியில் முக்கிய சப்ளையராக மாறியுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த கோலார் பகுதியில் வாழும் ஒரு விவசாய குடும்பம் 2000 தக்காளி பெட்டிகளை ஒரே நாளில் விற்பனை செய்து 38 லட்ச ரூபாய் வருமானத்தை பார்த்துள்ளது. இந்த வருமானம் அவர்களின் வாழ்வில் நினைத்து பார்க்காத ஒன்று என்று அவர்களை கூறியுள்ளனர்.

கர்நாடகாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் பார்த்து வரும் இந்த குடும்பம், 40 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விதைத்துள்ளனர். இரண்டு வருடத்திற்கு முன்பு தக்காளியின் மூலம் வெறும் 2000 மட்டுமே சம்பாதித்த இவர்கள் இன்று 38 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளனர். இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் விவசாயம் செய்யும் விவசாயிக்கு 100 ரூபாய் லாபம் கிடைத்தால் அதை கொண்டு போய் சேர்க்கும் இடைத்தலைவர்களுக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைப்பதே இன்றைய நடைமுறை.

இந்த நிலைமை மாறி, முழு லாபமும் விவசாயிக்கு கிடைத்தால், உழைத்த கால்கள் இன்னும் சற்று மகிழ்ச்சி அடையும்.