நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!

பிரபல ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் இப்போது ரூ.1 லட்சம் வரை ஹேர் ஸ்டைல் தொழிலில் சம்பாதிக்கிறார்.ஆனால் ஆலிம் ஹக்கீம் வெறும் ரூ.20-ல் தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்ட பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் முன்கூட்டியே இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் செய்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் செலுத்துகிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர் ஸ்டைல் ​​அனைவரையும் வியக்க வைக்கிறது.வயதானவர்களை கூட இளமையாகக் காட்டுகிறார்.

ஆலிம் ஹக்கீம் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணர்களில் ஒருவர். ஆலிம் ஹக்கீம் ஹேர் ஸ்டைலிங் மூலம் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளார்.ரஜினிகாந்த், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் முதல் விராட் கோலி, எம்.எஸ். தோனி வரை அனைத்து பிரபலங்களும் ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்டப்படுகிறார்கள். ஆலிம் ஹக்கீம் முடி வெட்டுவதற்கு ரூ.1 லட்சம் வரை வசூலிக்கிறார்.

சமீபத்திய ஒரு நேர்காணலில், ஆலிம் ஹக்கீம் தனது அற்புதமான பயணம் பற்றிப்
பேசியிருக்கிறார். அவர் தொடக்கத்தில் வெறும் 20 ரூபாயில் தான் முடி வெட்டத் தொடங்கியதாகக் கூறினார். ஆலிம் ஹக்கீமுக்கு 9 வயதாக இருந்தபோது, ​​அவரது தந்தை காலமானார்.

ஆலிம் ஹக்கீமின் தந்தை பாலிவுட் ஹீரோக்களுக்கு முடி வெட்டி வந்தார். ஷோலே, ஜன்சீர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடிகர்களுக்கு முடி வெட்டி ஸ்டைலிங் செய்து பிரபலமானார்.

தந்தை திடீரென இறந்த பிறகு, அந்தக் குடும்பம் வறுமையில் வாடியது.தனது தந்தை இறந்தபோது, ​​தனது கணக்கில் 13 ரூபாய் மட்டுமே இருந்ததாக ஆலிம் ஹக்கீம் கூறுகிறார்.

இதன் விளைவாக, குடும்பப் பொறுப்பை ஏற்க முடி வெட்டத் தொடங்கினார். முதலில் முடி வெட்டுவதற்கு 20 ரூபாய் வசூலித்ததாக ஆலிம் ஹக்கீம் கூறினார்.

முடி வெட்டுதல், ஷாம்பு போடுதல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு 30 ரூபாய் வசூலித்தார். பின்னர் மெதுவாக முடி வெட்டும் கடையில் ஏசியை பயன்படுத்தத் தொடங்கி 50 முதல் 75 ரூபாய் வரை வசூலித்தார்.

பின்னர் படிப்படியாக உயர்ந்து பாலிவுட்டில் சிறந்த ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணராக மாறினார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களிலும் ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணராக பணியாற்றியுள்ளார்.

இந்திய அணியின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு அலீம் ஹக்கிம் ஹேர் கட் செய்துள்ளார். ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் எம்.எஸ். தோனி ஒரு புதிய ஹேர் ஸ்டைலில் தோன்றுவார் இதற்குக் காரணம் அலீம் ஹக்கீம் என்று கூறப்படுகிறது.விராட் கோலியும் அலீம் ஹக்கீமிடம் தனது ஹேர் ஸ்டைலை பல முறை மாற்றியுள்ளார்.