Latest Singapore News

இப்படியும் ஓர் குடும்பமா!!!! எல்லோரையும் வியக்க வைத்த செயல்……

சீனாவில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவகாரத்து பெற்றார்.

பெண்ணின் குடும்பத்தினர் அதனை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிகழ்வு Hebei மாநிலத்தின் Zangzhou நகரில் நடைபெற்றது.

அந்த தகவலை The Thaiger செய்தி நிறுவனம் கூறியது.

அந்த பெண் 7 வருட திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி இருந்ததாக சொல்லப்படுகிறது.அந்த பெண் விவகாரத்து மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அவரின் இந்த முடிவை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.

சமூகத்தில் விவகாரத்து பற்றிய தவறான கண்ணோட்டம் குறைந்து வருகிறது.இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பம், அவருக்கு கேக்,பட்டாசு என கோலாகலமான கொண்டாட்டத்திற்கு தயார் செய்தது.

இது குறித்து பல நெட்டிசன்கள் பல கருத்துகளையும்,மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

“ விவகாரத்துக்கு பின்னர் வருந்தாமல் கொண்டாட வேண்டும்´´

“இத்தகைய குடும்பம் கிடைத்ததில் அந்த பெண் மிக அதிர்ஷ்டசாலி´´

என்றும் பலர் கருத்துகளைப் பகிர்ந்ததாக The Thaiger கூறியது.