83 ஆண்டுகால நட்பில் ஏற்பட்ட பிரிவு!! இப்படி அநியாயமா பிரிச்சுட்டாங்களே!!

83 ஆண்டுகால நட்பில் ஏற்பட்ட பிரிவு!! இப்படி அநியாயமா பிரிச்சுட்டாங்களே!! சிங்கப்பூர், Sentosa கடற்கரையில் WB100 நிகழ்ச்சியின் ஒரு பாகமான கார்ட்டூன் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது.நவம்பர் 26 – இல் முடிவுக்கு வரும் இந்த நிகழ்வில் 3 மீட்டர் மற்றும் 1.5 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த காற்று நிரப்பப்பட்ட பலூனால் ஆன “Tom& Jerry ” – இல் Jerry யை காணவில்லை.

அனைவரின் மனதிலும் மறக்கமுடியாத ஒரு கார்ட்டூன் ஜோடி என்றால் அது Tom& Jerry தான்.1940 களில் இருந்து ஒரு கலாட்டா நிறைந்த நண்பர்களுக்கு உதாரணமாக விளங்கும் இந்த ஜோடி பிரிந்தது சற்று வருத்தமளிப்பவையாக உள்ளது.

நவம்பர் 13 இரவு அல்லது மறுநாள் அதிகாலையில் jerry இன் உருவம் திருடு போயிருக்கும் என்று கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் Warner Bros Discovery கண்காட்சியின் அமைப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் இந்த காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் விலைமதிப்பானது என்பதால் மீண்டும் ஒன்று தயார்செய்வதில் காலதாமதம் ஆகும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதுவரை Tom க்கு அருகில் ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டு பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இதன் தொடர்பான விசாரணை நடந்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் Tom மற்றும் jerry ஒன்று சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.