சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமாவை ஏற்படுத்தும் நோய் பரவலா?

அமெரிக்காவில் ஐந்து மலேரியா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, புளோரிடாவில் நான்கு மற்றும் டெக்சாஸில் ஒன்று.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த நோய் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஒரு எச்சரிக்கையில், மலேரியா அறிகுறிகளைக் கொண்டவர் அவசரமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியது.

முதல் நோய் தொற்று சம்பவம் மே 26-ஆம் தேதி அன்று புளோரிடாவின் சரசோட்டா கவுண்டியிலும், ஜூன் 23-ஆம் தேதி அன்று டெக்சாஸின் கேமரூன் கவுண்டியிலும் கண்டறியப்பட்டது.

இந்த கொசுக்கள் அமெரிக்காவில் சில பகுதிகளில் காணப்பட்டாலும், அமெரிக்காவில் மலேரியா இன்னும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவில் மலேரியா நோய் தொற்று சம்பவம், பாதிக்கப்பட்டவர்களால் நாட்டிற்கு வெளியே பயணம் செய்வதவர்களோடு தொடர்புடையது.

மலேரியா நோய்த்தொற்றுகளில் 95 சதவீதம் ஆப்பிரிக்காவில் பரவுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெப்பம் அதிகமாக இருப்பதால், மலேரியா அதிகமாக பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

மலேரியா என்பது ஒரு நோயாகும், இது பெண் அனோபிலின் கொசுக்களால் சுமந்து செல்லும் ஐந்து வகை ஒட்டுண்ணிகளால் மலேரியா நோய் தொற்று பரவுகிறது.

காய்ச்சல், சளி, தலைவலி, தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும்.

சிறுநீரக செயலிழப்பு, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் கோமா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்பையும் மலேரியா ஏற்படுத்தும்.

டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய இரண்டு மாநிலத்துக்கும் விழுப்புணர்வு வழங்கியுள்ளன மற்றும் குடியிருப்பாளர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் குளங்களை வெளியேற்றவும், ஜன்னல் திரைகளில் துளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளன.

மலேரியாவின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளி வெளியில் நேரத்தைச் செலவிட்டாரா மற்றும் மலேரியா செயல்பாடு உள்ள பகுதியில் கொசுக்களால் கடிக்கப்பட்டாரா என்பதைக் கண்டறிய அவர்கள் அடிக்கடி பயண வரலாற்றைப் பெறுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்காணித்து, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.