சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகம் அனைத்து பொது வீடு அமைப்பு திட்டங்களின் தாமதத்தைப் பற்றிய தகவல்களை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அனைத்து திட்டங்களும் 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
BDO திட்டங்களில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபருக்கும் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையே ஏறக்குறையை 72 விழுக்காட்டு திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மீதமுள்ள 28 விழுக்காட்டு திட்டங்களை முடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியது.
கிருமி பரவல் காரணமாக அவைகள் முடிப்பதற்கு தாமதம் அடைந்தது.
சுமார் 11,940 அடுக்குமாடி வீடுகளை இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
2018க்கு பிறகு ஆறு மாதத்தில் அதிகமான வீடுகளைத் தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டது.
அதேபோல் செங்காங்கில் உள்ள அங்கோர்வேல் வில்லேஜ் வீடுகளும் முடிக்கப்பட்டுவிட்டது.
அங்கே உள்ள இரண்டு குடியிருப்பு பிளாக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஜூலை 10-ஆம் தேதி அவர்களின் வீட்டு சாவியைப் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
அங்கோர் வில்லேஜ் திட்டம் தாமதமடைந்ததால் அதற்கு முன்பதிவு செய்து இருந்த 197 பேரின் ஈட்டு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கழகம் தெரிவித்தது.
அதேபோல் மற்றொரு திட்டமான பொங்கோல் வாட்டர்வே சன்ரைஸ் திட்டமும் தாமதமானது.
கிட்டத்தட்ட 896 பேர் ஈட்டு தொகையைத் திரும்பப் பெற உள்ளனர் என்று மார்ச் மாதம் தெரிவித்தது.
இவ்வாண்டில் கிட்டத்தட்ட 20,000 வீடுகளை கட்டி முடித்து சாவிகளை ஒப்படைப்பதே இலக்கு. அதற்கேற்ப கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது என்று கழகம் தெரிவித்தது.