ஞாயிற்றுக்கிழமை OceanGate Expeditions நிறுவனத்தின் Titan நீர் மூழ்கி கப்பல் மூலம் 4 கிலோமீட்டர் கடலுக்கு அடியில் இருக்கும் பழைய டைட்டானிக் கப்பலைப் பார்க்க நீர் மூழ்கிக் கப்பல் விமானி ஒருவர் மற்றும் 4 நான்கு பேர் பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் கடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது இதற்கு முன் இரண்டு முறை டைட்டானிக் கப்பலை ஆராய்ச்சி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
Titan நீர் மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் நுழையும் போது 96 மணி நேர ஆக்சிஸனுடன் பயணத்தை ஆரம்பித்தது.
ஆக்ஸிஜன் 70-96 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
நேற்று காலை Titan கப்பலில் சுவாசிக்க கூடிய காற்று தீர்ந்து விட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கிறது.
இந்த ஆபத்தான பயணத்தை சிக்கியவர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
அவர்களில் கப்பலின் விமானியான ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) OceanGate இன் நிறுவனர் ஆவார்.
நீர் மூழ்கிக் கப்பலில் சிக்கியவர்களின் பெயர்கள் :
1) Stockton Rush (61)
2) Paul-Henry Nargeolet (73)
3) Harmish Harding (58)
4) Shahzada Dawood (48)
5) Suleman Dawood ( Son of Shahzada Dawood)
விமானியை தவிர மற்ற நான்கு பேரும் இந்த ஆபத்தான பயணத்துக்கு 250,000 டாலர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
நீர் மூழ்கிக் கப்பலில் சுவாசிக்கக் கூடிய காற்று அதிகம் இருக்காது என்று அஞ்சப்படுகிறது.
தேடும் நடவடிக்கை ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது.
கப்பலை கண்டுபிடித்தாலும் மீட்பதில் பல சிக்கல்கள் உள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர பகுதியில் காணாமல் போன கப்பல் `பேரழிவுகரமான வெடிப்பு´ ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக குழுவினர் அவர்களுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.