மக்கள் தொகை குறைந்து வருகிறதே என்று கவலைப்படும் நாடு……ஓர் புதிய அறிவிப்பை அறிவித்த வட்டாரம்…..தெரிந்து கொள்ளுங்கள்….

சீனாவின் மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து விட்டது.

60 ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு முதல்முறையாக சரிந்துள்ளது. அதனால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சாங்ஷான் வட்டாரம் ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இளம் வயது பெண்களை திருமணம் செய்தால் ரொக்க பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

25 வயதுக்குக்கீழ் மணமகளின் வயது இருந்தால் 100 யுவான் தொகை வழங்கப்படும். இளம் வயதுடைய ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்க அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு திருமணங்கள் மிக குறைவாகவே பதிவாகியுள்ளது. சுமார் 6.8 மில்லியன் திருமணங்கள் மட்டுமே பதிவானது.

இந்த புதிய நடவடிக்கை இளம் வயது ஆண்களும் பெண்களும் உரிய வயதிற்குள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை ஈன்றெடுக்க ஊக்குவிக்கப்படுவதும் அதில் ஒன்று.