பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை தடை விதித்த நாடு…. சிங்கப்பூருக்கு சிறப்பு அனுமதி….

இந்தியா கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதை தடை விதித்தது.

சிங்கப்பூருக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி அனுமதிக்க முடிவு செய்ததாக தெரிவித்தது. இந்தியா சிங்கப்பூருடனான சிறப்பு உறவை கருத்தில் கொண்டு முடிவு செய்துள்ளது.

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து அனைவரையும் இந்தியா அதிர்ச்சியடைய வைத்தது.

இந்தியா உலக அரிசி ஏற்றுமதியில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது.

ஜூலை மாதம் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) இந்தியா அதிகாரிகளுடன் அரிசி ஏற்றுமதி தடையிலிருந்து விலக்கு கோருவதற்காக நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறியிருந்தது.

சிங்கப்பூருக்கு அனுமதித்த முடிவின் உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பதாக ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தியா தெரிவித்தது.