நோய் தொற்று கட்டுப்பாடுகளைத் கட்டங்கட்டமாக தளர்த்தும் நாடு!ஓர் புதிய அறிவிப்பு…….

வடகொரியா கிருமி பரவல் கட்டுப்பாடுகளைத் தற்போது கட்டங்கட்டமாக தளர்த்தி வருகிறது. புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் வட கொரியர்கள் இனி நாடு திரும்பலாம் என்று அறிவித்துள்ளது.

அவர்கள் நாடு திரும்பியதும் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமி பரவல் கட்டுப்பாடுகள் உலக அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக KCNA செய்தி நிறுவனத்திடம் கூறியது.

Air Koryo எனும் வடகொரியாவின் தேசிய விமான நிறுவனம் மூவாண்டுகளுக்கு பிறகு அனைத்துலக விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 2020 க்குப் பிறகு முதன்முறையாக ராணுவ அணி வகுப்பைக் காண வெளிநாட்டு பிரமுகர்கள் பியோங்யாங்கிற்கு அழைக்கப்பட்டனர். அணிவகுப்பில் சீனா ரஷ்யா அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.