சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுக்குள் பயணிகளின் எண்ணிக்கை நோய் தொற்று பரவலுக்கு முன்பு இருந்த நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலைய ஊழியர்களுக்காக வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகளை முடக்கிவிட்டுள்ளது.இதனை விமான நிலைய சேவைகள் எனும் SATS நிறுவனம் முடக்கி விட்டது.
இதனை ஈடு கட்டுவதற்காக தனது ஊழியர்களின் சேவைத்தரத்தை சாங்கி விமான நிலையத்தில் மேம்படுத்த நினைக்கிறது.
தற்போது 17,000 ஊழியர்கள் SATS நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த எண்ணிக்கையானது கிருமி தொற்று காலத்துக்கு முன்பிருந்தது போன்றது.2020-ஆம் ஆண்டு முதலே ஊழியர்களில் சுமார் 25 விழுக்காட்டினர் மின்னிலக்கத் திறன்களில் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
பயணப் பெட்டிகளை நிர்வகிக்கும் திறன்களும் அதில் ஒன்று.குறிப்பிட்ட மின்கருவி அதற்காக உபயோகப் படுத்தப்படுகிறது.இந்த மின்கருவி பயணப் பெட்டிகளைச் சரியான விமானங்களுக்கு அனுப்ப உதவும்.மின்கருவியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு பெட்டியும் எங்கு இருக்கிறது என்பதை அறியலாம்.
அதோடு மத்திய தகவல் கட்டமைப்பும் உண்டு.விமானங்கள் வரும் நேரத்தை அட்டவணையிட்டுக் காட்டும் அமைப்பும் இருக்கிறது.
சில மின்னிலக்க கட்டஅமைப்புகளும் இந்த வசதிகளுடன் மேம்படுத்தவும் SATS நிறுவனம் எண்ணுகிறது.
அது மட்டுமல்லாமல் ஊழியர்களைத் தொடர்ந்து பயிற்சிகளுக்கு அனுப்புகிறது.தரமான சேவை வழங்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.