சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நிறுவனம்..!!!

சிங்கப்பூர்:கிராப் நிறுவனம் தனது ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

நிறுவனம் ஓட்டுநர்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் வெள்ளியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

2025 ஆண்டு முதல் நிறுவனத்தின் பெரும்பாலான முழுநேர பணியாளர்கள் சுகாதார பாதுகாப்பு சேவைகளில் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராப்பின் முழுநேர ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவ தடுப்பூசி மற்றும் மருந்துகளை பெறுவார்கள்.

ஊழியர்களின் டெலிஹெல்த் மருத்துவ சேவைகளுக்காக கிராப் ஆண்டுக்கு இரண்டு முறை 45 வெள்ளி செலுத்துகிறது.

தகுதிபெறும் சிறப்பு ஊழியர்களுக்கு நாடளாவிய ரீதியில் 700க்கும் மேற்பட்ட பல்துறை மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் தொலைத்தொடர்பு மூலம் மருத்துவரையும் அணுகும் வசதியும் ஏற்பாடு செய்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓட்டுநர்களுக்கு இலவசமாக தசைப்பிடிப்பு சேவைகளையும் வழங்குகிறது.

இத்தகைய சேவைகளை ஓட்டுநர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை சுறுசுறுப்பு மிக்க ஊழியர்களாக தொடர்ந்து சிறப்பாக வேலை செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.