சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!!
ஃபைசரின் $1 பில்லியன் வெள்ளி மதிப்பிலான புதிய ஆலை…
சிங்கப்பூர்: ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம் 250க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தி, தரம் மற்றும் பொறியியல் சார்ந்த வேலைகள் அதில் அடங்கும்.
2026-ஆம் ஆண்டில் 429,000 சதுர அடி பரப்பளவுள்ள துவாஸ் II வசதியில் 250 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஃபைசரின் தளத் தலைவர் பால் ஸ்முல்லன் கூறுகையில், இதுவரை, 230 இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சிங்கப்பூரர்கள் சுமார் 80 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஃபைசர் துவாஸில் அதன் உற்பத்தி வசதிகளை மேலும் விரிவுப்படுத்தியுள்ளது.
ஒரு பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இந்த புதிய ஆலையை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் திறந்து வைத்து பேசினார்.
இந்த புதிய ஆலையானது புற்றுநோய், வலி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும். மேலும் 2030க்குள் சிங்கப்பூரை மேம்பட்ட உற்பத்திக்கான உலகின் முன்னணி மையமாக மாற்றுவது இதன் இலக்கு என்றும், அதனை அடைய ஃபைசரின் முதலீடானது உதவும் என்று கூறினார்.
Follow us on : click here