ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்காத நிறுவனம்...!! வேலை அனுமதி அட்டை பெற தடை விதித்த MOM...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் PWM எனப்படும் முற்போக்கான ஊதியத் திட்டத்தைப் பின்பற்றத் தவறிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் சம்பளத் திட்டத்தை விட 2 ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்குவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு பணி அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
PMW திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள், இணையதளத்தில் தங்களுக்குச் சரியான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, சிங்பாஸ் விவரங்களை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
அதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகள் இருப்பதாக உணர்ந்தால் ஊழியர்கள் தங்கள் முதலாளிகளை அணுகலாம்.
பணியாளர் கூட்டமைப்பு அல்லது மனிதவள அமைச்சகத்தின் உதவியையும் நாடலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் PMW சம்பளத் திட்டம் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg