Singapore Job News Online

மதுபோதையில் தலைக்கால் புரியாமல் போலீசையே அடித்த குடிமகன்!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியையும், டாக்ஸி ஓட்டுநரையும் மது போதையில் தாக்கிய 35 வயதுடைய Chen Lei மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் காலாங்-பயா லேபார் விரைவுசாலையில் (KPE) நடந்தது.

35 வயதுடைய Chen Lei மது போதையில் இருந்துள்ளார். அவர் டாக்ஸி ஒன்றில் ஏறினார்.

விரைவுசாலைக்குள் டாக்ஸி நுழைந்ததும் Chen Lei சட்டென்று ஓட்டுநரின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அதோடு அவரின் கழுத்திலும் பலமுறை அடித்துள்ளார்.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓட்டுநர் சுரங்கத்தின் ஒரு பகுதியில் டாக்ஸியை நிறுத்திவிட்டு வெளியேறினார்.

டாக்ஸி ஓட்டுநர் இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Chen Lei டாக்ஸிலிருந்து இறங்கினார்.

பின்னர் காவல்துறை வாகனத்தில் Chen Lei யை அழைத்துச் சென்றனர். Chen இரண்டு முறை காவல்துறை அதிகாரியைக் குத்தியுள்ளார் என்று கூறப்பட்டது.

அதற்கு Chen Lei தன் பக்கம் உள்ள கருத்தைக் கூறினார். மதுபோதையில் இருந்ததாகவும், கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ததாக கூறினார்.

அரசாங்க தரப்பு வழக்கறிஞர்,“Chen யின் நடத்தை காவல்துறை அதிகாரிக்கும், டாக்ஸி ஓட்டுநருக்கும் மட்டும் ஆபத்தை விளைவிக்கவில்லை; மற்றவர்களுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தியதாக´´ கூறினார்.

அவரின் தவறான செயலுக்காக 22 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.