சிங்கப்பூரில் 5 கார்களை திருடிய வழக்கு!! 18 மாத நன்னடத்தை உத்தரவு..!!

சிங்கப்பூரில் 5 கார்களை திருடிய வழக்கு!! 18 மாத நன்னடத்தை உத்தரவு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 5 கார்களை திருடியதாக 20 வயது பெண்ணுக்கு 18 மாதங்கள் நன்னடத்தை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 5 கார்களையும் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து திருடியுள்ளார்.

நன்னடத்தை உத்தரவைத் தொடர்ந்து நூர் அமிரா முகமது ஃபௌசி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் 60 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும்.

மே 22, 2022 அன்று, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அமிராவுடன் சேர்ந்து ஒரு பாரில் கார்களைத் திருட திட்டமிட்டனர்.

பின்னர் அவர்கள் நால்வரும் Tai seng – இல் ஒரு கார் நிறுவனத்திற்கு சென்றனர். அங்குள்ள 2 கார்கள் திருடுவதற்கு ஏதுவாக பூட்டப்படாமல் இருந்துள்ளது. இரண்டு பேர் காரை திருட தயாரான போது அங்கு யாரேனும் வருகிறார்களா என அமிரா கண்காணித்து வந்துள்ளார்.

இரண்டு கார்களும் அவர்களால் லாபகரமாக திருடப்பட்டது. மறுநாள் மேலும் 3 கார்களை திருடிச் சென்றுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு 152,500 வெள்ளி என்று கூறப்பட்டது.

பின்னர் மே 27ம் தேதி வாடிக்கையாளரின் கார் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருடப்பட்ட கார்களை போலீசார் மீட்டனர். குற்றவாளியாக கருதப்படும் ஐந்தாவது நபர் அமிராவுடன் எவ்வாறு தொடர்புபட்டார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் கூறவில்லை.