சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் ஜனவரி 17ஆம் தேதியன்று காலை விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 29 மற்றும் 27 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது 29 வயதுடைய நபர் சுயநினைவுடன் இருந்ததாகவும், 27 வயதான நபர் மயக்கம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் 27 வயதான நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.