சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய கார்!! பறந்து கீழே விழுந்த நபர்!!

சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய கார்!! பறந்து கீழே விழுந்த நபர்!!

சிங்கப்பூரில் Aljunied சாலையில் ஒரு நபர் சாலையைக் கடக்கும் பொழுது சிவப்பு நிற கார் ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.

இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இந்த சம்பவம் Aljunied சாலை மற்றும் சிம்ஸ் டிரைவ் சந்திப்பில் விபத்து நேர்ந்தது.

பாதிக்கப்பட்டவருக்கு வயது 37.

பாதிக்கப்பட்ட நபரை சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவர் சுயநினைவுடன் கொண்டு சென்றதாக தெரிவித்தது.

சாலையில் ரெட் சிக்னல் இருந்தபோதிலும் சிவப்பு நிற கார் வேகமாக வந்து அவர் மீது மோதியது. அவர் தூக்கி வீசப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.