நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!!
சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ்-ஜொகூர் பாலத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு ஜொகூர் சோதனைச் சாவடி ஆணையம் கேக் ஒன்றை வழங்கியது.
கேக்கில் இருநாட்டின் உறவை எடுத்துக் கூறும் வகையில் இணைப்புப் பாலத்தின் படம் இடம்பெற்றிருந்தது.
கேக்கில் “100 வருட வலுவான பிணைப்புகள்” என்று எழுதப்பட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பந்தம் தொடரும் என நம்புவதாக மலேசிய சோதனைச் சாவடி ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பாலம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இரு நாடுகளும் பாலத்தில் 100 புறாக்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது உலகின் பரபரப்பான தரைப்பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Follow us on : click here