சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிந்தது!!

சிங்கப்பூரில் 15 பினோய் செக்டர்(Benoi Sector) பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் Boom lift பாரந்தூக்கி தீப்பற்றிக்கொண்டது.

அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.Boom Lift பாரந்தூக்கி ஊழியர்களை ஏற்றி செல்லும்.

இச்சம்பவத்தின் வீடியோ Safety Watch-SG முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் பாரந்தூக்கி தீப்பற்றி எரிவதையும்,கட்டுமானத் தளத்தில் புகை மண்டலமாக சூழ்ந்து இருப்பதையும் காணலாம்.

தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தண்ணீர் பீய்ச்சும் குழாய்களைப் பயன்படுத்தி அணைத்தனர்.

தீயானது திறந்த வெளியில் மூண்டது.அதனால் அருகிலுள்ள கட்டிடடங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.