சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!!

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!!

மலேசியாவின் கோலாலம்பூரில், மே 13-ஆம் தேதி அன்று, ஒரு பெரிய மரம் சாலை மற்றும் ரயில் பாதையில் விழுந்து சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த முறை ஜாலான் பினாங்கில் நடந்ததுள்ளது.

மரம் விழுந்ததில் சாலையில் சில கார்கள் சேதமடைந்தன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அந்த பாதையை மக்கள் தவிர்க்கமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், நகரின் பிற பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் மரம் விழுந்ததில் ஒருவர் பலியானர். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அதன் காரணமாக, மேலும் விபத்துகளைத் தடுக்க, அபாயகரமான பல மரங்களை வெட்ட நகரம் முடிவு செய்துள்ளது.