மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!!

ஜப்பானில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கைது.புறா கூட்டத்தின் மீது வண்டி ஏற்றி ஒரு புறாவை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த கொடூர செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறார்.

இச்சம்பவம் ஜப்பானில் உள்ள தலைநகர் தோக்கியோவில் நடந்துள்ளது.

காரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் புறாக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியுள்ளார்.

புறாக்களின் கூட்டம் சாலையில் இருந்ததுள்ளது. அது அவரை எரிச்சல் அடைய செய்துள்ளதாகவும், அதற்காக இப்படிப்பட்ட செயலை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில்,“ மனிதர்களுக்கு சாலை சொந்தமானது. புறாக்கள் விலகி சென்றிருக்க வேண்டும்”. இதனை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.