“சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும்”- வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கெடு!!

"சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும்"- வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கெடு!!

சிங்கப்பூரில் கடன் முதலைகள் துன்புறுத்தியதாக கூறப்படும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் மே 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும்.

அவரை துன்புறுத்திய நபரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பங்களாதேஷைச் சேர்ந்த 46 வயதுடைய உடின் முகமது ஷரிஃப் கடன் கொடுப்பவர்களிடம் இருந்து கடன் வாங்கியதாகவும், அவருடைய முன்னாள் முதலாளிகளை கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் அவர் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்று கூறுகிறார்.

மனிதவள அமைச்சகத்திடமும், சிங்கப்பூர் காவல்துறையிடமும் TODAY நாளேடு இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு இந்த இரண்டு அமைப்புகளும் பதிலளித்தது.

ஷரிஃப் முறையான உரிமம் இல்லாமல் வட்டிக்கு பணம் வழங்குபவர்களிடம் இருந்து கடன் பெற்றதற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் கூறியது.

மேலும் ஒரு மாதத்திற்கு சிங்கப்பூரில் இருந்து புதிய வேலைத் தேட அவகாசம் வேண்டி காவல்துறையிடமும், குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திடமும் முறையிட்டதாக TODAY செய்திதாளிடம் ஷரிஃப் கூறினார்.

ஆணையத்தின் அதிகாரிகள் அவரை மே 24-ஆம் தேதி சந்தித்ததாகவும்,மூன்று நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதாக சொன்னார்.

மூன்று நாட்கள் என்று கூறியவுடன் கால அவகாச நாட்களை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதன் பிறகு அதிகாரிகள் மே 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, விசாரணையில் உதவுவதற்காக ஷரிஃப்புக்கு சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டது.