NTUC fairprice பேரங்காடியின் விளம்பர பலகை விழுந்து 64 வயது மூதாட்டி காயம்…!!!

NTUC fairprice பேரங்காடியின் விளம்பர பலகை விழுந்து 64 வயது மூதாட்டி காயம்...!!!

சிங்கப்பூர்: NTUC FairPrice பேரங்காடியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை விழுந்ததில் 68 வயதான மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் (நவம்பர்) உட்லண்ட்ஸில் உள்ள 888 பிளாசா கடைத் தொகுதியில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த FairPrice வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியது.

FairPrice நிறுவனமானது விளம்பரப் பலகையை மாற்றுமாறு விநியோகஸ்தரிடம் கேட்டுள்ளது.

FairPrice நிறுவனம் காயமடைந்த தாய் மற்றும் மகனுடன் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு முறையான தீர்வு காண விருப்பதாக கூறியது.

 

Follow us on : click here ⬇️