பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா உயிரியல் பூங்காவில் 43 வயதான மாலி என்ற யானை, நவம்பர் 28ஆம் தேதி அன்று இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருந்தது தெரியவந்தது.
இலங்கையிலிருந்து மணிலாவுக்கு கொண்டுவரப்பட்டபோது மாலியின் வயது 11 மாதம்.
மாலி, மணிலா உயிரியல் பூங்காவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தனிமையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் அதை விலங்குகள் சரணாலயத்திற்கு மாற்றுமாறு விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மாலி பல ஆண்டுகள் பூங்காவில் தனித்து வாழ்ந்ததால் அதற்கு காட்டில் வசிக்கத் தெரியாது என்று கூறி பூங்காவில் உள்ள அதிகாரிகள் அனுப்ப மறுத்து விட்டனர்.
விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் மாலியின் மரணம் குறித்து வருந்துவதாக தெரிவித்தனர்.
உயிரியல் பூங்காவின் அருங்காட்சியகத்தில் மாலியின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்படும் என்று பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.