மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மெக்சிகோவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவிய முதல் சம்பவம் இது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சொன்னது.

இந்த தொற்றால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.இந்த தகவலை சுகாதார அமைச்சகம் கூறியது.

அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்தது.