என்னது..!! பாம்பா!!! காரின் என்ஜின் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 2மீ நீளமுள்ள இராஜ மலைப்பாம்பு!!

அக்டோபர் – 28 ஆம் தேதி Marine Crescent பகுதியில் உள்ள ஒரு கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் நுழைந்த 2மீ நீளமுள்ள இராஜ மலைப்பாம்பை கடும் முயற்சிக்கு பிறகு சிறு காயங்களோடு மீட்டனர் Acres நிர்வாகிகள் ( Animal Concerns Research and Education Society) .

மேலும் இந்த மலைப்பாம்பு இராஜ மலைப்பாம்பு அல்லது பின்னற்கோடு மலைப்பாம்பு இனத்தை சேர்ந்தது எனவும் இவை பொதுவாக மனிதர்களை காயப்படுத்துவது குறைவு எனவும் கூறியுள்ளார் Acres – ன் இணை தலைமை நிர்வாகி கலை வாணன் பாலகிருஷ்ணன். இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட 2மீ நீளமுள்ள மலைப்பாம்பு ஒரு சில காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் , அதற்கான தெளிவான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

மலைப்பாம்புகள் பொதுவாக சற்று மூடப்பட்ட வெதுவெதுப்பான இடங்களில் தஞ்சம் அடையும்.இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாகும் போது அது தன்னை பாதுகாத்துக்கொள்ள இருக்கமான காற்றோட்டமற்ற பகுதிக்கு செல்ல வழிவகை செய்திடும்.இவ்வாறு இந்த மலைப்பாம்பும் அங்கு கூடப்பட்ட மக்கள் கூட்டத்தினால் காரின் என்ஜின் பகுதியில் சென்று மாட்டிக்கொண்டது.

பாலகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார். மேலும் Acres நிர்வாகிகள் அங்கு வந்தடைவதற்கு முன்னதாகவே அங்கு இருந்த ஒரு சிலர் குச்சிகளாலும் அதனை தகுந்த பாதுகாப்பு முறைகளின்றி கைகளால் பிடித்து இழுக்கவும் முயற்சி செய்திருக்க வேண்டும் , இதனால் அந்த மலைப்பாம்பிற்கு காயங்கள் ஏற்பட காரணமாக அமைந்திருக்க கூடும் எனவும் கூறியுள்ளார்.

மலைப்பாம்புகளை நகர்புற பகுதிகளில் காணும் போது முதலில் செய்யவேண்டியவை: காலம் தாழ்த்தாமல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மலைப்பாம்பு இருக்கும் இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தல் கூடாது.தகுந்த முறைகள் இல்லாது பாம்பை காயப்படுத்தும் வகையில் பிடிக்க முயற்சிப்பது கூடாது.

” அந்தணர்f என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”. (குறள் – 30 )

விளக்கம்: எல்லா உயிர்களோடும் கருணையோடு இருப்பவர்களே மனிதர்களாக கருதப்படுவார்.